சருமம், கூந்தலுக்கு ஆரோக்கியம் தரும் நெல்லிக்காய்!

செவ்வாய் மார்ச் 03, 2020

நெல்லிக்கனி முகத்திற்கு அழகை கொடுக்கிறது. முடிவளர்ச்சிக்கு தேவையான சத்துக்களும், வேதிப்பொருட்களும் நெல்லிக்கனிகளில் நிறைந்துள்ளன.

இயற்கையின் படைப்பில் காய்களும், கனிகளும் நமக்கு வரப்பிரசாதமாக உள்ளன. இதில் நெல்லிக்காயில் ஏராளமான நன்மைகள் உள்ளன. என்றும் இளமை தோற்றம் பெற நெல்லிக்கனிகளை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு உண்டு. ஆம்.. தோலில் உள்ள செல்கள் புத்துணர்வு பெற்று, ரத்த ஓட்டத்தை நன்கு தூண்டி தோலில் சுருக்கங்கள் போன்றவை ஏற்படுவதை தடுக்கிறது நெல்லிக்காய்.

குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒரு முறை நெல்லிக்காய் சாப்பிடுவதால் முகப்பொலிவு, பளப்பான சருமம் ஆகியவற்றை பெறலாம். முடிகொட்டுதல் தலைமுடி உடலின் ஆரோக்கியத்தை மட்டும் குறிப்பதில்லை, தலையை வெளிப்புற சூழல்களிலிருந்தும் பாதுகாக்கவும் செய்கிறது.

முகத்திற்கு அழகையும் கொடுக்கிறது. முடிவளர்ச்சிக்கு தேவையான சத்துக்களும், வேதிப்பொருட்களும் நெல்லிக்கனிகளில் நிறைந்துள்ளன. குறிப்பாக இதில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துகள் தலைமுடி வேர்களை வலுப்படுத்தி முடி கொட்டுவதை குறைக்கிறது. மேலும் ஏற்கனவே முடி உதிர்ந்த இடங்களில் மீண்டும் தலைமுடியின் வளர்ச்சியை தூண்டும் பணியையும் செய்கிறது. எனவே நெல்லிக்காய்களை தொடர்ந்து உண்பவர்களுக்கு முடிகொட்டும் பிரச்சினை குறைகிறது.