சர்வதேச மனித உரிமைகள் தினம்!

செவ்வாய் டிசம்பர் 10, 2019

1948-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் திகதி பாரீஸ் நகரில் அன்றைய ஐநா சபை தலைமையகம் இருந்தது. 58 நாடுகள் இணைந்த ஐநா சபையில் 48 நாடுகளின் ஒத்துழைப்பு வாக்குகளுடன் 'சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம்’ அறிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்துதான் டிசம்பர் 10-ம் திகதியை சர்வதேச மனித உரிமைகள் தினமாக ஐநா அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

உலக நாடுகள் அனைத்திலும் மனித உரிமைகள் அனைத்து சூழ்நிலைகளிலும் மீட்கப்பட வேண்டும் என்பதே ஐநா-வின் குறிக்கோளாக இருந்தது. இதற்காக உலக நாடுகள் பலவற்றிலும் பிரச்சாரங்களும், விவாதங்களும், விழிப்பு உணர்வு பேரணிகளும் நடத்தப்பட்டன.

மேலும் மனித உரிமைகள் மீதான விழிப்பு உணர்வுக்காக 1966-ம் ஆண்டு முதல் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ’மனித உரிமைகள் களத்தில் சிறந்தோருக்கான ஐநா விருது’ அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.