சர்வதேச திரைப்பட விழாவிற்கு செல்கிறது 'ஒத்த செருப்பு'திரைப்படம்!

ஞாயிறு அக்டோபர் 06, 2019

சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20- ஆம் தேதி கோவாவில் தொடங்குகிறது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார்.

50- வது சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20-ஆம் தேதி தொடங்கி, 28- ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200- க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் விழாவில் திரையிடப்படவுள்ளன.

தமிழில் பார்த்திபன் நடித்து இயக்கிய 'ஒத்த செருப்பு' திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாவிற்கு செல்கிறது. தமிழில் இருந்து ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் ஆகிய படங்கள் விழாவில் திரையிடப்படவுள்ளன.

அதேபோல் மலையாளத்திலிருந்து உயரே, ஜல்லிக்கட்டு, கோலாம்பி உள்ளிட்ட படங்களும் திரையிடப்படவுள்ளன. மேலும் ஹிந்தியில்உரி, கல்லி பாய், சூப்பர் 30, பதாய் ஹோ உள்ளிட்ட படங்கள் திரையிடப்படவுள்ளன.