சடலங்களை புதைக்க இடமின்றி தவிக்கும் அமெரிக்கா! உருமாறிய கொரோனா வைரசால் பிரிட்டன் தடுமாற்றம்-

திங்கள் சனவரி 04, 2021

உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டன் அமெரிக்கா போன்ற நாடுகளில் வேகமாக பரவுகிறது. அமெரிக்காவில் மட்டும் கடந்த 19 நாட்களில் 50000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.மேலும் அமெரிக்காவில் சடலங்களை புதைக்க இடம் இல்லாமல் கல்லறைகள் நிரம்பி வழிகின்றன.

கொரோனா தாண்டவத்தால் இதுவரையில் உலகம் முழுவதும் 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் , உலக நாடுகள் மத்தியில் பெரும் அச்சத்தை விதைத்திருக்கிறது. 

கடந்த 6 நாட்களாக நோய் தொற்றால் தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்டுகின்றனர். பிரிட்டனில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள நான்கு அடுக்கு கட்டுப்பாடுகளால் எந்த பயனும் இல்லை எனவும், நோய் தொற்றை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கை கைமீறி சென்றுவிட்டதாகவும், உடனடியாக நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் கடுமையாக கட்டுப்பாடுகளை கொண்டு வருவோம் என அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவில் மட்டும் கொரோனா தொற்றால் 2 கோடிக்கு மேற்பட்டோர் பாதிப்படைந்தனர். மேலும் 3லட்சத்து 60 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். குறிப்பாக 19 நாட்களில் 50.000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். 

இந்நிலையில் கலிபோர்னியாவில் உள்ள கல்லறைகளில் சடலங்களை புதைக்க இடம் இல்லாததால் பல நாட்கள் சடலங்கள் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.