சத்தியமூர்த்தி அறக்கட்டளையினூடாக முதலாவது கிணறு!

சனி ஏப்ரல் 13, 2019

பு. சத்தியமூர்த்தி அறக்கட்டளையினூடாக முதலாவது கிணற்றை இன்று(12) தனது பிறந்தநாளை முன்னிட்டு சிந்து வெற்றிகரமாக கையளித்துள்ளாள்....

நானும் சிந்துவும் முகநூலில் ஒரு வீடியோ பார்த்தோம். அதில் ஒரு சிறுமி தனது பதின்மூன்றாவது பிறந்த நாளில் மலசலகூடம் அமைத்து கொடுத்ததாகவும் அதனைத் தொடர்ந்து தான் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் செய்து கொடுத்ததாகவும் தனது திட்டத்தை வரவேற்று பலபேர் தனக்கு முன் வந்து உதவுகிறார்கள் என்றும் பதிவிட்டிருந்தார்.

நான் சிந்துவிடம் கேட்டேன் ஏன் உமக்கும் பதின்மூன்றாவது பிறந்த நாள் வருகிறது தானே ஏதாவது முயற்சிக்கலாமே என்று. அதற்கு அவள் என்ன செய்யலாம் என்று பலவற்றைப்பற்றி யோசித்தாள். வீடு என்றால் அதை அரசாங்கம் அல்லது தொண்டு நிறுவனங்கள் கட்டிக்கொடுக்கும். அது வேண்டாம் என்றாள். மலசலகூடம் அது அந்த பிள்ளை கட்டிக் கொடுத்து கொண்டு இருக்கிறா அதை கொப்பியடித்ததாக வந்து விடும் அதனால் அதுவும் வேண்டாம். அப்போது நான் சொன்னேன்

"ஏன் நீர் கிணறு கட்டிக் கொடுக்கலாம் தானே என்று. அதனால் மக்கள், கால் நடைகள், பறவைகள், மரம் செடி கொடிகள் என எவ்வளவோ பயன் பெற முடியும் என்று". அதற்கு அவள் ஓம் நல்லாக இருக்குதே அப்ப செய்வம் என்றாள். அப்போதும் அதை யாருக்கு கொடுக்கலாம் என்றாள். பொதுக்கிணறு அமைத்தால் நிறைய பேர் பயனடைவார்கள். ஆனாலும் அதுவும் தொண்டு நிறுவனங்கள் செய்து கொடுக்கும். ஏன் நாங்கள் போரில் காயம்பட்டு நடக்க முடியாதவர்களுக்கு உதவினால் என்ன?

அவர்கள் நாட்டுக்காக தங்களது அவயங்களை இழந்து நடக்க முடியாது சக்கர நாற்காலியில் இருந்து வீட்டில் கிணறு இல்லாமல் தூர இடங்களில் இருந்து தண்ணீர் எடுத்து வருபவர்களுக்கு செய்தால் என்ன என்று நான் கேட்டேன். "ஓம் அது நல்லதாக தான் இருக்கு என்றாள்". உடனேயே நாட்டில் இருக்கும் சஜீவனிடம் தொடர்பு கொண்டு விபரம் கேட்ட போது இருவரின் விபரம் கிடைத்தது. அதில் முதலாவது ஒருவரை தேர்ந்தெடுத்தாள்.

நஅதை தனது பிறந்த நாளில் கொடுத்தாலும் தனது அப்பாவின் பெயர் நிலைத்து நிற்க வேண்டும் என்றும் அவரின் பத்தாவது நினைவு நாளில் ஒரு நூலை வெளியிட்டு அந்த நிகழ்வில் "சத்தியமூர்த்தி அறக்கட்டளை " என்று அங்குரார்ப்பணம் செய்து அதனூடாக நிகழ்வுகளில் சேர்ந்த பணத்தை வைத்து செய்து கொடுத்து மனநிறைவு அடைகின்றாள் சிந்து....

ா

கிணறு கட்டி பைப்லைன் செய்து கொடுத்து அதிலிருந்து அவர்களின் காணிக்கு வெளியில் ஒரு பைப்லைன் அமைத்து வெளியில் இருந்து யாருக்கும் தண்ணீர் தேவை என்றால் எப்பவும் எடுக்க கூடியவாறும் கால்நடைகள் குடிக்க கூடியவாறும் சிறிய தொட்டி அமைத்து இருக்கு. வெய்யில் காலத்தில் பறவைகளும் மிருகங்களும் தண்ணீர் குடித்து தாகம் தீர்த்துக் கொள்ளும். இத்திட்டம் இத்தோடு நின்று போகாது தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் தான் செய்து கொடுப்பேன் என்கிறாள் சிந்து. அவளுக்கு உதவிய அனைவருக்கும் நன்றிகள்.

சிந்துவின் அம்மா நந்தினி