சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்வு!

வெள்ளி ஜூலை 12, 2019

பொகவந்தலாவ காவல் துறை  பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ – டின்சின் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 காவல் துறைக்கு  கிடைத்த இரகசிய தகவலின்படி இன்று காலை பொகவந்தலாவ காவல் துறை  7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 


 
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்திய பல உபகரணங்களும் காவல் துறையால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 


 
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

 


 
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ காவல் துறையினர்  மேற்கொண்டு வருகின்றனர்.