சத்யராஜ் நடிப்பில் உருவாகும் புதிய படம்-தீர்ப்புகள் விற்கப்படும்

வெள்ளி பெப்ரவரி 08, 2019

புதுமுக இயக்குனர் தீரன் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு;தீர்ப்புகள் விற்கப்படும்' என்று தலைப்பு வைத்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கிய நிலையில், படம் பற்றி இயக்குநர் கூறியிருப்பதாவது,

சமுதாயத்தின் மீது ஒரு தனிமனிதனுக்கு இருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்திய வெட்னஸ்டே' பட பாணியில் உருவாகும் திரைப்படமே இது. படத்தின் தலைப்பு சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், அது கதைக்கு மிகவும் அவசியமாக இருந்தது.

படப்பிடிப்பை தொடங்கியுள்ளோம். கோடைவிடுமுறையில் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம் என்றார்.

யாமிருக்க பயமே படத்திற்கு இசையமைத்த பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அஞ்சி ஒளிப்பதிவு செய்ய சரத் படத்தொகுப்பை கவனிக்கிறார். ஹனிபீ கிரியேஷன்ஸ் சார்பில் சாஜீவ் மீரா சாஹிப் ராவுத்தர் இந்த படத்தை தயாரிக்கிறார்.