சு.க உறுப்பினர்கள் ஐவரின் கட்சி உறுப்புரிமை நீக்கம்!

சனி செப்டம்பர் 14, 2019

நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திஸாநாயக்க, டிலான் பெரேரா, விஜித் விஜயமுனி சொய்சா, ஏ.எச்.எம்.பௌசி மற்றும் லக்ஷ்மன் யாபா அபேவர்தன ஆகியோரது கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளது. 

சுதந்திர கட்சியின் மூலம் தேசிய பட்டியலூடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இவர்களில் டிலான் பெரேரா, மற்றும் எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோர் அண்மையில் பொதுஜன பெரமுனவின் அங்கத்துவத்தைப் பெற்றிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசகரவினால் மேற்குறிப்பிட்ட ஐந்து பேருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.