சுகாதார அதிகாரிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து

வியாழன் மார்ச் 04, 2021

களுத்துறை வடக்கிலுள்ள கொஸ்கஸ் சந்திப்பகுதியில் இன்று(4) பிற்பகல் பேருந்து ஒன்று புகையிரதம்  ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

களுத்துறையிலுள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சுற்றுலாப்பயணிகள் மீது பிசிஆர் சோதனை மேற்கொள்ளவென கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையிலிருந்து சுகாதார பணியாளர்களைக் கொண்டு சென்ற சொகுசுப் பேருந்து ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்து களுத்துறையிலிருந்து மருதானை வரை பயணித்த புகையிரதம் மோதுண்டுள்ளது.

பேருந்து பலத்த சேதமடைந்ததுடன் படுகாயமடைந்த பேருந்தின் சாரதி நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இப்பேருந்தில் 5 பெண்கள் உட்பட 12 பேர் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.