சுமந்திரனிடம் இருந்து சசிகலாவிற்கு நீதி பெற்றுத்தருமாறு மகிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை

வியாழன் ஓகஸ்ட் 06, 2020

திருமதி சசிகலா ரவிராஜின் விடயம் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வரை சென்றுள்ளது என கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைத் தமிழரசுக் கட்சி இந்த விடயத்தை மகிந்தவிடம் கொண்டு சென்று சசிகலாவிற்கு நீதி கிடைக்க உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. 

மக்களால் நிராகரிக்கப்பட்ட சுமந்திரன் பின் கதவால் மோசடி முறையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதற்கு முயற்சிக்கின்றார். இதற்காக சசிகலாவிற்கு கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றார். 

பல தரப்பினர் ஊடாகவும் கொடுக்கப்பட்ட அழுத்தத்திற்கு சசிகலா அடிபணியவில்லை. இதனால், கட்சித் தலைமைக்கு எதிராக செயற்பட்டால் பயன்படுத்துவதற்கு என, அவரை வேட்பாளராக்கியபோது அவரிடம் இருந்து பெறப்பட்ட ராஜினாமா கடிதத்தை கட்சி அலுவலகத்தில் இருந்து எடுத்துவந்த முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் சுமந்திரனின் எடுபிடியுமான சயந்தன் தேர்தல் ஆணையாளரிடம் கொடுத்து சசிகலா இராஜிநாமா செய்துவிட்டார் என அறிவித்திருந்தார். 

ஆனால், அந்தக் கடிதத்திற்கும் தமக்கும் எந்தவித உடன்பாடும் இல்லை என சசிகலா அறிவித்திருந்தார். இதனால் வாக்கு எண்ணும் நிலையத்தில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவுகின்றது.