சுந்தர புரத்தில் பாவணைக்கு உதவாத உணவுப் பண்டம் கைப்பெற்றப்பட்டது

செவ்வாய் பெப்ரவரி 12, 2019

வவுனியா 4ம் கட்டையில் பேக்கரி  வைத்துள்ள அலி என்கின்ற வியாபாரி வவுனியா மணிபுரம் சுந்தரபுரம் மற்றும் நகர தமிழ் பகுதிகளில் பாண் வியாபாரியிடமிருந்து பாவனைக்கு உதவாத உணவுப் பண்டங்களை பொதுச்சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டது.

வியாபாரத்திற்காக சுந்தரபுரத்திற்கு கொண்டுவரப்பட்ட பாண்கள் மற்றும் நீல நிற பாண் பெட்டி என்பன சோதனைக்குட்படுத்தப்பட்டது. பழையபாண்களும் உள்ளே கறள்பிடித்த இரும்பு பாண்பெட்டியும்  கைப்பற்றப்பட்டது.

இவ்வாறு பாவனைக்குதவாத தீண்பண்டங்களை கொள்வனவு செய்து உண்பதனால் பொதுமக்கள் பல்வேறு தொற்றுநோய்க்கு உள்ளாகுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட வியாபாரின் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரச அதிகாரிகள் தெரிவித்தனர்.