சுப்பிரமணியம் சச்சிதானந்தம் அவர்கள் “நாட்டுப்பற்றாளர்”; என மதிப்பளிப்பு

சனி மார்ச் 06, 2021

 இத்தாலி நாட்டின் கீழ்ப்பிராந்தியப்பொறுப்பாளர் சுப்பிரமணியம் சச்சிதானந்தம் அவர்கள் 03.03.2021 அன்று உடல்நலம் பாதிப்படைந்த நிலையில் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கிறது.

குஞ்சண்ணை என்று அன்பாக எல்லோராலும் அழைக்கப்பட்ட இவர்>2008ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இத்தாலி நாட்டில் தேசியப்பணியாற்றிய அனைத்துச் செயற்பாட்டாளர்களையும் அந்நாட்டு அரசு கைதுசெய்து>செயற்பாடுகள் அனைத்தும் முடக்கநிலைக்குத் தள்ளியபோது>அக்காலப்பகுதியில் எமது அமைப்பினால் செயற்பாடுகளை மீண்டும் இயங்குநிலைக்குக்கொண்டுவரப் பணிசெய்யுமாறு அழைக்கப்பட்டபோது>காலத்தின் தேவையறிந்து தன்னை ஓர் செயற்பாட்டாளராக இணைத்துத் தேசியச்செயற்பாடுகளை முன்னகர்த்தியவராவார். 

2009ஆம் ஆண்டிற்குப் பின்னரான காலத்திலும் மனந்தளராது தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது சிந்தனைக்கமைவாக>மாவீரர்களது கனவுகளை நனவாக்கும் உறுதியோடு செயலாற்றியவராவார். இவர் தனது அன்பாலும் பொறுமையாலும் மக்களது மனங்களில் நிறைந்தவர். 

இத்தகைய விடுதலைப்பற்றுறுதியுடன் இறுதிவரை செயற்பட்ட செயற்பாட்டாளரைத் தமிழ்மக்கள் இழந்துநிற்கின்றனர். இவரின் இழப்பால் துயருற்றிருக்கும்

குடும்பத்தினர்>உறவினர்கள்>நண்பர்களின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதுடன் சுப்பிரமணியம் சச்சிதானந்தம் அவர்களது தேசப்பற்றுக்காகவும் தமிழினத்திற்கு ஆற்றிய பணிக்காகவும் ~~நாட்டுப்பற்றாளர்|| என மதிப்பளிப்பதில் நாம் பெருமையடைகின்றோம்.