சுடுந்தீ

செவ்வாய் ஏப்ரல் 28, 2020

பிள்ளைச் சிறையுடைக்க வழியற்ற 
தந்தைக் கண்ணீர் 
ஆவியாகிக் கரைசேர்கிறது.

இனியொரு வலியில்லை
அந்தச் சிவபெருமானுக்கு.

எல்லாம்
முருகனுக்குத் தான்.

கூண்டுக்குள் உப்புக் கரிக்கும்
பிள்ளைக் கண்ணீரின் வரிகளில்
இந்த இரவு தீப்பிடித்தெரியும்.

மகனின் ஞாபகங்களில்
தந்தையின் சிதை மூளும்.

சிறைக் கம்பிகள் வழியே
நிலவு படமாய் ஓட விடும்
தோள் சுமந்த அப்பனின்
பழைய காட்சிகளை.

அவன் அழுது தீர்ப்பான்
அப்பாக்கும் பிள்ளைக்குமான
வாழ்வின் அத்தனை சுவடுகளையும்.

காலத்தில் நின்று எரியும்.

தந்தைச் சாபத்தின்
சுடுந்தீ.

தீர்ப்பற்ற வழக்குகளின் முறிந்த தராசுகள்
பிள்ளைக் கொள்ளியற்றுப் புதைக்கும்
தந்தைக் கோபத்தில் 
சிதறிப் போகட்டும்
அதிகாரங்களின் தலைமுறைகள்.

தீபிகா
27.04.2020
08.57 Pm