சுவாமி விவேகானந்தருக்கும் அமெரிக்கா வில் இரட்டை கோபுர தாக்குதலுக்கும் என்ன தொடர்பு?

புதன் செப்டம்பர் 11, 2019

நியூயார்க் நகரில் விமானங்களை மோதி இரட்டை கோபுர கட்டிடங்களை தகர்த்த பயங்கரவாத தாக்குதல் தினத்துக்கும் சுவாமி விவேகானந்தருக்கும் உள்ள தொடர்பு பற்றி பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா நகரில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு புதிய திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மோடி, இன்று பயங்கரவாதம் என்பது நாட்டின் எல்லைகளுக்குள் கட்டுப்படாத ஒரு சித்தாந்தமாகவே மாறிப்போய் உலகளாவிய பிரச்சனையாக ஆகிவிட்டது குறித்து வேதனை தெரிவித்தார்.
 

நமது அருகாமையில் (பாகிஸ்தான்) வேரூன்றி செழிக்கும் இந்த பயங்கரவாதம் இந்த உலகத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

 

நியூயார்க் நகர இரட்டை கோபுர கட்டிடம் எரிந்த காட்சி


ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் (11-9-1893)உலக சமாதானம் தொடர்பாக தனது வரலாற்று சிறப்புமிக்க உரையை சுவாமி விவேகானந்தா சிகாகோ நகரில் ஆற்றினார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதே செப்டம்பர் மாதம் 11-ம் திகதி உலகையே உலுக்கிய அமெரிக்காவின் இரட்டை கோபுர கட்டிடத்தின்மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என மோடி குறிப்பிட்டார்.
 

சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் தலைமையிலான அல் கொய்தா அமைப்பினர் கடந்த 11-9-2001 அன்று நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தக மையம் கட்டிடத்தின் இரு கோபுரங்களின் மீது கடத்தப்பட்ட விமானங்களை மோதி நடத்திய தாகுதலில் சுமார் 3 ஆயிரம் பேர் உயிரிழந்தது நினைவிருக்கலாம்.

இந்த நாளை ஆண்டுதோறும் அமெரிக்க மக்கள் துக்கதினமாக அனுசரித்து வருவது குறிப்பிடத்தக்கது.