சுவிசில் நினைவுகூரப்பட்டதமிழீழப் பெண்கள் எழுச்சிநாளும், 2ம் லெப் மாலதி உட்பட்ட மாவீரர்களினதும் நினைவு வணக்க நிகழ்வும்!

திங்கள் அக்டோபர் 12, 2020

 தமிழீழப் பெண்கள் எழுச்சிநாளும்,முதற்;களப் பலியானபெண் மாவீரர் 2ம் லெப் மாலதி உட்பட்ட ஐந்துமாவீரர்களின் நினைவெழுச்சிநாளும்,இலங்கை இந்தியஅரசுகளின் கூட்டுச் சதிக்குப் பலியானலெப்; கேணல் குமரப்பா,லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் நினைவேந்தலும்;சுவிஸ் பேர்ண்மாநிலத்தில் 10.10.2020 சனிஅன்றுநினைவுகூரப்பட்டது.

t

பேர்ண் பிரதானதொடருந்துநிலையத்திற்குமுன்பாகஅமைந்துள்ளதிடலில் கவனயீர்ப்பு ஒன்றுகூடலுடன் முற்பகல் 11:30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இவ் கவனயீர்ப்பு நிகழ்வானதுகுறிக்கப்பட்ட இரு மணத்தியாலங்களில் நிறைவுபெற்றுமீண்டும் மாலை 18:30 மணியளவில் உள்ளரங்கமண்டபநிகழ்வாகமுன்னெடுக்கப்பட்டது.

சுவிஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பின்ஒருங்கிணைப்பில்;இவ் வணக்க நிகழ்வில் பொதுச்சுடர், ஈகைச்சுடர்கள் ஏற்றலுடன் மலர்மாலைஅணிவிக்கப்பட்டது.

u

தொடர்ந்துஅகவணக்கம்,சுடர்வணக்கம,;மலர்;வணக்கம் செலுத்தப்பட்டது. 

தாய்நாட்டின் விடுதலையோடுபெண்ணினத்தின் விடுதலையையும் கருத்திற் கொண்டு ஆயுதமேந்தி இந்தியவல்லாதிக்கத்திற்கெதிராகவீரப்பெண்ணாகவிடுதலைக்காய் வீறுகொண்டெழுந்துவித்தாகிவீழ்ந்த 2ம் லெப் மாலதிஅவர்களின்  நினைவுநாளானதுதமிழீழப் பெண்கள் எழுச்சிநாளாகநினைவுகூரப்பட்டுகடைப்பிடிக்கப்பட்டும் வருகின்றது.

கொரோனாநோய்த்தொற்றுப் பேரிடருக்குமத்தியிலும்  நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான நடைமுறைகளைப்பேணி  இவ்வெழுச்சி நிகழ்வானது உணர்வு பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டு,நம்புங்கள் தமிழீழம் பாடல் அனைவரும் இணைந்துபாடியதனைத் தொடர்ந்துதாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன. 

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு