சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2022!

வியாழன் மே 19, 2022


ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாதவடுவாகமாறியதும்,சிங்களப் பேரினவாத அரசினால் வல்லாதிக்கஅரசுகளின் பேராதரவோடு 2009ல் நிகழ்த்தப்பட்டஅதியுச்ச இனப்பேரழிப்பு நடந்ததுமான    முள்ளிவாய்க்கால்   தமிழினஅழிப்பு நினைவு  நாளானது 18.05.2022 புதன் அன்று  பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள    Waisenhausplatzj    திடலில் மிகவும் உணர்வெழுச்சியுடன்; நினைவுகூரப்பட்டது.  

இதில் பலநூற்றுக்கணக்கில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள்  கனத்த இதயங்களுடன் வலிசுமந்தநினைவுகளைநெஞ்சினில் சுமந்துகலந்துகொண்டிருந்தனர்.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால்நடாத்தப்பெற்ற இக் கவனயீர்ப்புநிகழ்வானதுபொதுச்சுடரேற்றலுடன்,சுவிஸ் மற்றும் தமிழீழத் தேசியக்கொடிகள்  ஏற்றிவைக்கப்பட்டதனைத் தொடர்ந்து மலர்மாலை  அணிவிக்கப்பெற்றது.

தொடர்ந்துபொதுக்குறியீட்டுவணக்கப்படத்திற்கானஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன்,அகவணக்கம் செலுத்தப்பட்டது.

மக்களால்சுடர்,மலர்வணக்கம் செலுத்தப்பட்டசமவேளையில் இளம் இசைக் கலைஞர்களால் வணக்கப்பாடல்களும் வழங்கப்பெற்றன.

இக் கவனயீர்ப்புநிகழ்வில் குர்திஸ்தான் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுதமிழீழவிடுதலைப் போராட்டம் மற்றும் தமிழினஅழிப்புசார்ந்தும் தமதுகருத்துக்களைதங்களதுபேச்சுக்களில் வெளிப்படுத்தியிருந்தனர். இனஅழிப்புசார்ந்ததுண்டுப்  பிரசுரங்களும்இளையோர்களால் விநியோகிக்கப்பட்டதுடன்  ,ஜேர்மன்,பிரெஞ்சு,ஆகியமொழிகளில்; பேச்சுக்களையும் வழங்கப்பட்டது. காலத்தின் தேவைகருதியதும் சமகாலஅரசியல் நிலவரங்களையும் உள்ளடக்கியதுமானபேச்சுக்களும் தமிழ்மொழியிலும் இடம்பெற்றிருந்தன.

முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதிநாட்களில் எமதுஉறவுகள் பலசிரமங்களுக்குமத்தியிலும் தமதுபசியாற  ஒருநேர  உணவுக்கு  வழியின்றி உப்பு,பால் இல்லாத  கஞ்சி உட்கொண்டு பசியாறியதைநினைவுகூரும் நோக்கில் நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்குகஞ்சிவழங்கப்பெற்றது. அத்துடன் பேர்ண் மாநிலத்தில் அமைந்துள்ள Münchenbuchsee தொடரூந்து நிலையத்திலிருந்து இனஉணர்வாளர்களினால் வேற்றின மக்களுக்கு தமிழினஅழிப்பினைதெரியப்படுத்தும் நோக்கிலானநடைப்பயணமும் இடம்பெற்றுநினைவுத்திடலைவந்தடைந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

நிகழ்வில் தமிழினஅழிப்புசார்ந்த,தமிழினஅழிப்பிற்குநீதிகேட்கும் வகையிலானபதாதைகளைத் தாங்கியசுவிஸ் வாழ் தமிழ்மக்கள்; தமதுஉணர்வுகளைஆற்றாமையோடுவெளிப்படுத்தியதோடுநாம் அனைவரும் ஒற்றுமையாகதாயகம் நோக்கிதொடர்ந்துபயணிப்போம் என்றஉறுதிமொழியுடன் நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்துசுவிஸ்நாட்டின் கொடியுடன் தமிழீழத் தேசியக்கொடியும் இறக்கப்பட்டு,தமிழர்களின் தாரகமந்திரத்துடன் ஷவலிகளிலிருந்து வலிமை பெறுவோம்! உறுதி  கொள்வோம்! உரிமைமீட்போம்!| என்றஉணர்வுடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் நிறைவுபெற்றது. 

சுவிஸ் தமிழர்ஒருங்கிணைப்புக்குழு