சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டநடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்கநிகழ்வு!

திங்கள் மே 20, 2019

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும்,தமிழீழவிடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து;மாவிலாற்றிலிருந்துமுள்ளிவாய்க்கால் வரைநடைபெற்றநீண்டபெரும் திருப்பங்கள்நிறைந்தசமர்களில் வீரகாவியம் படைத்து தங்களை ஆகுதியாக்கிய  நினைவுகள் சுமந்தஎழுச்சிவணக்கநிகழ்வானது 19.05.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வலேமா நிலத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.

சுவிஸ் தமிழர்ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்கநிகழ்வில் பொதுச் சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடிஏற்றிவைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டுஅகவணக்கத்துடன் சுடர்வணக்கம்,மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் சுடர்,மலர்வணக்கம்செலுத்தப்பட்டசமவேளையில் இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும்; இசைக்கப்பட்டன.

நடுகல்நாயகர்களாகதங்களைவிதையாக்கியபெருந்தளபதிகளையும்,மாவீரப் போராளிகளையும் நினைவுகூரும் இவ் வணக்கநிகழ்வின் எழுச்சிநிகழ்வுகளாகஎழுச்சிப் பாடல்கள், இளையோர்களின் எழுச்சிநடனங்கள்,சிறுவர்களின் இன உணர்வு மிக்க பேச்சுக்கள், கவிதைகள்; ,காலத்திற்கேற்ப கருப்பொருளைகொண்டசிறப்புரையுடன் வில்லுப்பாட்டும்இடம்பெற்றன.

வலேமாநிலத்தில் நடைபெற்ற இவ்வெழுச்சிநிகழ்வானதுதமிழீழவிடுதலைக்கும் அதற்கான தமிழ்த்தேசியஅரசியல் செயற்பாடுகளுக்குமான மீள் தொடக்கப் புள்ளியாக அமையப்பெற்றதுடன் பலநூற்றுக்கணக்கானமக்கள் கலந்துகொண்டமையானதுமிகவும் உணர்வு பூர்வமாகவும், நம்பிக்கையைத் தருவதாகவும் அமைந்திருந்தது.

நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலை மக்கள் எல்லோரும் சேர்ந்துபாடி,தமிழீழத் தேசியக்கொடி இறக்கலைத் தொடர்ந்து,தாரகமந்திரத்துடன் வணக்கநிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நிறைவுபெற்றன. 

சுவிஸ் தமிழர்ஒருங்கிணைப்புக்குழு