சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டநடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்தவணக்க நிகழ்வு!

திங்கள் மே 23, 2022


தமிழீழவிடுதலைப்போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும் தமிழீழ விடுதலைப்புலிகள்  அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரைநடைபெற்றநீண்டபெரும்திருப்பங்கள்நிறைந்தசமர்களில் வீரகாவியம் படைத்துதங்களை ஆகுதியாக்கிய அனைத்து மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்தவணக்கநிகழ்வானது 22.05.2022 ஞாயிறுஅன்றுவோமாநிலத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.

சுவிஸ் தமிழர்ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்கநிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடிஏற்றிவைக்கப்பட்டதனைத்  ஏற்றப்பட்டுஅகவணக்கத்துடன் சுடர்வணக்கம் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் சுடர்   மலர் வணக்கம் செலுத்தப்பட்டசமவேளையில் இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும்; இசைக்கப்பட்டன.

நடுகல்நாயகர்களாகதங்களைவிதையாக்கியபெருந்தளபதிகளையும்இமாவீரப் போராளிகளையும் நினைவுகூரும் இவ் வணக்கநிகழ்வின் எழுச்சிநிகழ்வுகளாகஎழுச்சிப் பாடல்கள்   இளையோர்களின் எழுச்சிநடனங்கள் 
  இளையோரின்உணர்வுமிக்கபேச்சுக்கள்இகவிவணக்கத்துடன்காலத்திற்கேற்பகருப்பொருளைகொண்டசிறப்புரையும் இடம்பெற்றன.

நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் என்றபாடலைமக்கள் எல்லோரும் சேர்ந்துபாடிஇதமிழீழத் தேசியக்கொடிகையேற்றலினைத் தொடர்ந்து  தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நிறைவுபெற்றன. 


சுவிஸ் தமிழர்ஒருங்கிணைப்புக்குழு