சுவிசில் வாழும் தமிழ் உறவுகளின் முக்கிய கவனத்திற்கு!

வியாழன் ஜூலை 02, 2020

பன்னிரெண்டு வயதிற்கு மேற்பட்ட அனைவரும் எதிர்வரும் 06.07.2020 முதல் பொதுப்போக்குவரத்தில் சுகாதாரப் பாதுகாப்பு முகவுறை அணிதல் சுவிஸ் நடுவணரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சுவிசில் தளர்வு தொடரும் வேளை இறுக்கமான கட்டளையும் பிறப்பிக்கப்பட்டுள்ளதனால் சுவிஸ் அரசினால் வழங்கப்படும் சுகாதாரப் பாதுகாப்பு விதிமுறைகளை உரியமுறையில் கடைப்பிடிக்குமாறும் இத் தருணத்தில் கேட்டுக் கொள்கின்றோம் என சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.