சுவிஸ் தூதரக பணியாளரை விசாரணை செய்யவேண்டும்!

திங்கள் டிசம்பர் 02, 2019

இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக பணியாளரை சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் விசாரணை செய்யவேண்டும் என சிறிலங்கா  அரசாஙகம் வலியுறுத்தியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்கவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால்  குணரட்ணவும் சிறிலங்காவுக்கான சுவிஸ் தூதுவரை சந்தித்து சிஐடியினர் மேற்கொண்டுள்ள விசாரணைகள் குறித்து தெளிவுபடுத்தியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவரை விசாரணைக்காக ஒப்படைக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை சுவிஸ் தூதரகம் ஏற்றுக்கொள்ளாத போதிலும் நவம்பர் 29 ம் திகதி சுவிஸ் தூதரகம் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெறுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட சம்பவம் இடம்பெற்ற விதம் குறித்தும்,நேரம் குறித்தும் பாதிக்கப்பட்டவர் சார்பில் சுவிஸ் தூதரகம் சிஐடியினருக்கு வழங்கிய தகவல்கள்,குறிப்பிட்ட தினத்தன்று பாதிக்கப்பட்டவரின் நடமாட்டத்துடன் பொருந்தவில்லை,என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிசிடிவி காட்சிகள்,தொலைபேசி உரையாடல்கள்,ஜிஎஸ்பி தரவுகள்,உட்பட பல விடயங்களை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது குறிப்பிட்ட சம்பவம் இடம்பெற்ற விதம் குறித்தும்,நேரம் குறித்தும் பாதிக்கப்பட்டவர் சார்பில் சுவிஸ் தூதரகம் சிஐடியினருக்கு வழங்கிய தகவல்கள்,குறிப்பிட்ட தினத்தன்று பாதிக்கப்பட்டவரின் நடமாட்டத்துடன் பொருந்தவில்லை,என தூதுவருக்கு தெரிவிக்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் சுவிஸ் தூதரகத்திற்கு சமர்ப்பித்துள்ள நிராகரிக்க முடியாத ஆதாரங்கள் காரணமாக இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான உண்மையை கண்டுபிடிப்பதற்காக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சு இதற்காக பாதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுபவரை சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் விசாரணை செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

கடத்தப்பட்டவேளை தனக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது என பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் பெண் குறிப்பிட்டுள்ளதால் அவரை இலங்கையில் சட்டவைத்திய அதிகாரியொருவரின் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும் எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுவிஸ் தூதரகத்தை ஒத்துழப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.