சுவரொட்டிகளுடன் வட்டுக்கோட்டையில் இருவர் கைது

திங்கள் ஜூலை 06, 2020

தேர்தல் விதிமுறைகளை மீறி சுவரொட்டிகளை ஒட்டிய குற்றச்சாட்டில் இரண்டு பேர், வட்டுக்கோட்டையில் காவல் துறையால்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான ஈஸ்வரபாதம் சரவணபவனின் சுவரொட்டிகளுடனே இருவரும் நேற்று (05) இரவு கைது செய்யப்பட்டதாக வட்டுக்கோட்டை காவல் துறையினர் கூறினர்.