சுயலாபத்திற்காக சிறீலங்கா அரசுடன் சோரம்போவோர் - அனந்தி கண்டனம்!

வெள்ளி டிசம்பர் 24, 2021

கனடாவில் மாவீரர் நினைவேந்தலில் கார்த்திகைப்பூ வைத்து வழிபட்டதைத் தடுக்க முனைந்ததது தமிழர் உரிமைப்போராட்டத்தைப் பாதிக்கும் ஒரு செயற்பாடே என்கிறார் தாயகத்தில் இருந்து முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன்

இது போன்ற தவறுகளில் இருந்து தம்மைத் திருத்திக்கொண்டு அனைத்து தமிழ்க் கோயில் நிருவாகத்தினரும் புரிந்துணர்வோடு நடக்க முன்வரவேண்டும்.

இலங்கைத் தீவில் தான் ஒற்றையாட்சி அரசு இதுபோன்ற நினைவேந்தற் செயற்ப்பாடுகளைத் தடுக்கிறதென்றால் அதைப் புலம்பெயர் சூழலிலும் சாதிக்க முனையும் சக்திகளுக்குப் புலம்பெயர் தமிழர் இடமளிக்கக் கூடாது என்று அவர் புலம்பெயர் கோயில் நிருவாகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.