சவேந்ர பெர்னாண்டோவுக்கு எதிராக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை!

புதன் ஓகஸ்ட் 14, 2019

ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ர பெர்னாண்டோவுக்கு எதிராக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சி.ஐ.டி. சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரியுள்ளது.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய  சம்பவம் தொடர்பில், எழுத்து மூலம் சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அப்போதைய பணிப்பாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவுக்கு 2009 மே 27 ஆம் திகதி கிடைத்த உண்மை நிலைமைகள் மறைக்கப்பட்ட முறைப்பாட்டின் பின்னணியில் ஜனாதிபதி சட்டத்தரணி சவேந்ர பெர்னாண்டோ உள்ளதாக வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களை மையப்படுத்தியே அவருக்கு எதிராக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சி.ஐ.டி. சட்ட மா அதிபரிடம் ஆலோசனைக் கோரியுள்ளது.

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரண்னாகொட, சி.ஐ.டி. விசாரணைகளில் வெளிப்படுத்திய தகவல்களை மையப்படுத்தி அவரிடம் விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளுக்கு ஆஜராக ஜனாதிபதி சட்டத்தரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே சி.ஐ.டி. இந்த ஆலோசனைகளை சட்ட மா அதிபரிடம் கோரியுள்ளதாக சி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட காவல் துறை  அத்தியட்சர் ஷானி அபேசேகர தெரிவித்தார்.