Choisy Le Roi நகர சபையின் தீர்மானமும் தவறான பிரச்சாரமும், செய்திப் பரவல்களும்

திங்கள் சனவரி 27, 2020

கடந்த 22ம் திகதி செவ்வாய்க்கிழமை Choisy Le Roi நகர சபையினரால் தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டதுடன், தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணையை கோரித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Choisy Le Roi நகர சபையினரால் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

1

2

இந்தத் தீர்மானம் மிகவும் காத்திரமானது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இதற்காக கடந்த ஒன்றரை வருடமாக   Choisy Le Roi தமிழ் சங்கம் ஓய்வின்றி உழைத்தது. எம்மினத்தின் உண்மை நிலை கண்டு நகரசபை இத்தீர்மானத்தை தற்போது நிறைவேற்றியுள்ளது.

ஆனால் இந்த வெற்றிக்கு தாங்களே காரணம் என்பதுபோன்று சுவிசைத் தளமாகக் கொண்டு இயங்கும் அமைப்பொன்று உண்மைக்குப் புறம்பான அறிக்கையை வெளியிட்டு, அது ஊடகங்களில் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Choisy Le Roi நகர சபையினர் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு Choisy Le Roi தமிழ் சங்கமும், எமது மக்களுமே உழைத்து, இன்று ஒரு சிறு வெற்றியை கண்டு இருக்கின்றனர். இதில் தனி நபர்களோ அல்லது வேறு எந்தவொரு அமைப்புக்களோ சம்மந்தப்படவில்லை என்பதை இங்கு உறுதியாகக் கூறிக்கொள்ள விளைகின்றோம் என Choisy Le Roi தமிழ் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

1

தொடர்புபட்ட செய்தி
பிரான்சு சுவாசிலே றூவா மாநகரத்தில் தமிழீழமே தமிழர்களின் தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றம்!