எகிப்தில் 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான மம்மிக்களின் சவ பெட்டிகள் கண்டுபிடிப்பு!!

ஞாயிறு நவம்பர் 15, 2020

எகிப்தில் 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான 100 மம்மிக்களின் சவ பெட்டிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். எக்பதில் கடைசியாக ஆட்சி செய்த 26-வது வம்சாவளி மன்னர்களின் சடலங்களாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் கிடைத்த சவபெட்டிகளை அடுத்த ஆண்டு பொதுமக்கள் பார்வைக்கு அருங்காட்சியகங்களில் வைக்கப்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் 59 மம்மிக்களின் சவ பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.