எல்லை மோதலில் 63 படையினர் பலி!

புதன் ஜூன் 17, 2020

லடாக் எல்லையில் சீனா இந்திய இராணுவத்துக்கிடையிலான மோதலில் 20 இந்திய வீரர்கள் பலியானதாகவும் சீன தரப்பில் 43 வீரர்கள் பலியானதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

லடாக் எல்லையில் சில வாரங்களாக இந்தியா - சீனா இடையே போர்ப் பதற்றம் நீடித்து வருகிறது. இரு நாட்டுப் படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதிகளில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இரு நாட்டு இராணுவத்தின் படைப்பிரிவு தளபதிகள் அளவிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இரு நாட்டு படைகளும் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய சீன படைகள் மோதலில் இந்திய இராணுவ அதிகாரி மற்றும் 2 வீரர்கள் என 3 பேர் வீரமரணம் அடைந்தாகவும், இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடியில் சீனா தரப்பிலும் சில வீரர்கள் உயிரிழந்ததாகவும் முன்னர் செய்திகள் வெளியாகின.