எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை இடைநிறுத்துமாறு மனு!

செவ்வாய் செப்டம்பர் 17, 2019

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை நடத்துவதை நிறுத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்து, உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதியைச் சேர்ந்த மூவர் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் மற்றும் எல்பிட்டிய பிரதேச சபைக்கு பொறுப்பான தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் ஆகியோர், பிரதிவாதிகளாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழு கூடாமல் தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டதுடன், 2017ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களின் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படுவதாகவும் மனுதாரர்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.