ஏழு பேர் விடுதலைக்காக நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்!!

புதன் நவம்பர் 18, 2020

30 ஆண்டு காலம் சிறைவாசத்திலிருந்து எப்போது விடுதலை கிடைக்கும் எனத் தமிழ்ச் சமூகம் பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகும்,தமிழக ஆளுநர் உத்தரவுக்காகக் காத்திருக்கும் அந்த ஏழு பேரும் சிறையிலேயே நாட்களைக் கழிக்கிறார்கள்.

இந்நிலையில்,தமிழகம் முழுவதும் 18-ஆம் தேதி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்க வலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோட்டில் த.பெ.தி.க நிர்வாகிகளோடு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். ம.தி.மு.க எம்.பி ஈரோடு கணேசமுர்த்தி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.