எழுக தமிழ் எழுச்சி பேரணி!! -இரண்டாம் நாள் பரப்புரை-

சனி ஓகஸ்ட் 24, 2019

தமிழ் மக்க பேரவையால் நடத்தப்படும் எழுக தமிழ் எழுச்சி பேரணிக்கான இரண்டாம் நாள் பரப்புரை இன்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1

எழுக தமிழ் - 2019 பரப்புரைக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் நாள் பரப்புரையானது வடமராட்சி, கோப்பாய் மற்றும் பொன்னாலை பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடமராட்சி நெல்லியடி மற்றும் பருத்தித்துறை பகுதிகளில் ஓரணியாகவும், கோப்பாய் கிருஸ்ணன் ஆலய தேர் திருவிழா மற்றும் பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய தேர் திருவிழா நிகழ்வில் கூடிய மக்களிடம் ஓரணியும் துண்டுப்பிரசுரங்களை வழங்கி பரப்புரைகளை மேற்கொண்டுள்ளன.

2

மக்கள் ஆர்வத்துடன் துண்டுப்பிரசுரங்களை வாங்கிச் செல்வதுடன் பரப்புரைக் குழுவினரிடம் மேலதிக தகவல்களையும் கேட்டுச்சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.