ஏழுபேரை விடுதலை செய்ய வலியுறுத்தி நளினி உண்ணாவிரத போராட்டம்!

சனி அக்டோபர் 26, 2019

ராஜீவ் காந்தியின் கொலை விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஏழுபேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தண்டனை அனுபவித்து வரும் நளினி உண்ணாவிரத போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார்.

இன்று (சனிக்கிழமை) காலை முதல் அவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நளினி சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் சிறைதுறை அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

சிறையில் உள்ள 7 பேரையும் ஆளுநர் விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர்.

அவர்கள் 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று ஆளுநர் தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து அதிகார பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

இதனையடுத்து எழுவரின் விடுதலையை வலியுறுத்தி குறித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ரவிச்சந்திரன் என்பவர் பிரதமருக்கு கடிதமொன்றையும் எழுதியிருந்தார்.இந்நிலையில், நளினி உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.