எம் கடமையிலிருந்து...

ஞாயிறு ஜூலை 05, 2020

விடைதேடி விடைதேடி
வினைத்திட்பம் கொள்வோம்
விடைதேடி விடைதேடி
விடுதலைக்காய் உழைப்போம்
விடைதேடி விடைதேடி
விழிப்புடனே நடப்போம்
விடைதேடி விடைதேடி
வினைத்தூய்மை கொள்வோம்
பலவீனமான இனத்தின்
பலமான ஆயுதமாய்
கரும்புலிகளைக் கொண்டுவந்தேன்
என்று சொல்லி
எம் முன்னே நிற்கும்
பார்வதி பிள்ளையவனுக்கு
பதிலொன்று சொல்ல
பாரெங்கும் உள்ள தமிழரெல்லாம்
தம்முயிர்தான் அறப்பெற்று
தன்னிறைவாகத்தான் உழைத்து
தமிழீழ விடுதலைக்காய்
தலைநிமிர்ந்து நடக்கின்றாரென்ற செய்தி
அறிவறிந்த இனமென
அவனியோர் சொல்லும் செய்தி
அண்ணனவன் அகம்மகிழ
எம்தகுமிகு செயலாலே
அணிதிரண்டே நடந்திடுவோம்
எக்காலமும் ஏற்றமுடன் வாழ
முப்பாலாய் மொழிந்து
மெய்ப்பொருள் தரும்
தமிழ் முறையாம்
திருக்குறள் வழிநின்று
முந்துறும் ஊழை
முழுமையாய் உய்த்தறிந்து
உயர்வு செய்வழிகலெல்லாம்
உழைப்பறிவால் பெற்று
ஆழ்வினையுடைய மக்களென
வீழந்து கிடந்தலறும்
வியனுலகின் ஊழையும்
உள்ளது உள்ளபடி உய்த்துணர்ந்து
உலகுயரத் தமிழரெல்லாம்
வையத்தலைமை கொண்டுழைப்போம்
காலத் தேவையால் கொடுத்த விலையே
எம் இனத்தின் ஆயுதம்
முள்ளிவாய்க்காலில் நின்று
முழு உலகையும் கற்ற
தலைவன் காலத் தலைமுறை நாம்
உறவுகளின் இன்னல் களைவதும்
இன இறைமையை நிலைநாட்டுவதும்
எம்முன் உள்ள தலையாய பணி
எம்மகத்தே அடுக்காத
நோய் எல்லாம் விரட்டி
வளமும் வல்லமையும் தரும் அருமருந்தே
கருவேங்கைகள் நினைவொளியாகும்.

- அராலியூர் கலைமகள் பிரான்சு