என் உயிருக்கு ஆபத்து- சீனு ராமசாமி பரபரப்பு டுவிட்

புதன் அக்டோபர் 28, 2020

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக இயக்குனர் சீனு ராமசாமி பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் சீனு ராமசாமி. இவர் தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது விஜய் சேதுபதியை வைத்து மாமனிதன் எனும் படத்தை இயக்கி உள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் இன்று காலை சீனு ராமசாமி டுவிட்டர் பக்கத்தில், என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும் அவசரம் என பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்த 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.