எங்களது கோலத்தை அழிக்காதே!

வியாழன் சனவரி 02, 2020

புள்ளிவைத்து
கோலம்
போடுவது
தமிழரின்
மரபு
அதிலும்
மார்கழிமாதத்தில்
இடும் கோலம்
உச்சபட்சம்
கோலம்
போட்டவர்கள்
கைது
கோலம்போடவும்
தடை
இந்திய அரசே
நீ இதிகாச
புருஷராய்இரு
எங்களது
கோலத்தை
அழிக்காதே
நீ அலங்கோலமாய்
ஆகிவிடுவாய்
உன் அழிவு
நீ அழித்த
தமிழினத்தோடு
தொடங்குகிறது
நீ இல்லாத
கடவுள்களோடு
கட்டி புரண்டு
வாழ்ந்திருப்பாய்
நாமோ எமது
தீர்க்கதரிசியின்
கண் அசைவில்
வாழ்ந்தவர்கள்
பொய்யாகாது
அவனது மெய்

றொப்