எந்த நிபந்தனைகளையும் சஜித் ஏற்றுக்கொள்ளவில்லை!

வெள்ளி நவம்பர் 08, 2019

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு எந்த நிபந்­த­னையும் இன்­றியே சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ர­வ­ளிக்க முன்­வந்­தி­ருக்­கின்­றது. கூட்­ட­மைப்பின் ஆத­ரவை பொறுத்­துக்­கொள்ள முடி­யா­ததாலேயே எதிர்க்­கட்சியினர் மீண்டும் அவர்­களின் பழைய பல்­ல­வியை பாட ஆரம்­பித்­தி­ருக்­கின்­றனர். தெற்கு மக்கள் கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் இவர்­களின் கோரிக்­கையை நிரா­க­ரித்­த­துபோல் இம்­மு­றையும் தோற்­க­டிப்­பார்கள்.

வடக்கு அர­சியல் கட்­சி­களின் எந்த நிபந்­த­னை­க­ளையும் சஜித் பிரே­ம­தாச ஏற்­றுக்­கொள்­ள­வில்லை என ஐக்­கிய தேசிய கட்சி உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று சபை ஒத்­தி­வைப்­பு­வேளை பிரே­ர­ணையில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

மிலே­னியம் செலன்ஞ் கோப்­ப­ரேஷன் ஒப்­பந்தம் தொடர்­பாக சஜித் பிரே­ம­தாச அவரின் நிலைப்­பாட்டை அறி­வித்­தி­ருக்­கின்றார். ஒப்­பந்­தத்தின் உள்­ள­டக்­கங்கள் தொடர்­பாக மீண்டும் ஆராய்ந்து பார்த்தே கைச்­சாத்­தி­டு­வ­தாக குறிப்­பிட்­டி­ருக்­கின்றார். அதனால் அது­தொ­டர்பில் யாரும் பிரச்­சி­னைப்­ப­டத்­தே­வை­யில்லை.

மேலும் வடக்கு அர­சியல் கட்­சி­க­ளினால் முன்­வைக்­கப்­பட்­டுள்ள நாட்டை பிள­வு­ப­டுத்தும், சுயாட்­சியை பெற்­றுக்­கொ­டுக்கும் நிபந்­த­னை­களை சஜித் பிரே­ம­தாச ஏற்­றுக்­கொண்­ட­தாலேயே தமிழ் அர­சியல் கட்­சிகள் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ர­வ­ளிக்க முன்­வந்­தி­ருப்­ப­தாக எதிர்க்­கட்­சி­யினர் விமர்­சித்து வரு­கின்­றனர். 

இவர்கள் தெரி­விப்­ப­துபோல் யாரு­டைய நிபந்­த­னை­க­ளையும் ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை என்றே எமது வேட்­பாளர் தெரி­வித்­தி­ருக்­கின்றார். தமிழ் தேசிய கூட்­ட­மைப்பும் நிபந்­தனை இன்­றியே சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ர­வ­ளிக்க முன்­வந்­தி­ருக்­கின்­றது.

கடந்த ஜனா­தி­பதி தேர்­த­லின்­போதும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு ஆத­ர­வ­ளிக்க முன்­வந்­த­போது நாட்டை பிள­வு­ப­டுத்தும், சுய­நிர்­ணய கோரிக்கை, தனி­யாட்சி போன்ற கோரிக்­கை­களை ஏற்­றுக்­கொண்டதாலேயே கூட்­ட­மைப்பு ஆத­ர­வ­ளிப்­ப­தாக இவர்கள் தெற்கில் பிர­சாரம் செய்­தார்கள்.

 ஆனால் கடந்த 4 வரு­டங்­களில் இவர்கள் தெரி­வித்த ஏதா­வது இடம்­பெற்­றி­ருக்­கின்­றதா என கேட்­கின்றேன். இவர்­களின் பொய் பிர­சா­ரத்தை அன்று மக்கள் நிரா­க­ரித்­தனர். 

தற்­போது மீண்டும் பழைய பல்­ல­வியை ஆரம்­பித்­தி­ருக்­கின்­றனர். தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் பாரா­ளு­மன்­றத்தில் ஒரு­போதும் நாட்டை பிள­வு­ப­டுத்தும் கருத்­துக்­க­ளையோ, இனங்­க­ளுக்­கி­டையில் பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்தும் கருத்­துக்­க­ளையோ தெரி­வித்­த­தில்லை. அத்­துடன் அவர்தான் வடக்கில் தேசிய கொடியை உயர்த்தி அனை­வரும் இலங்­கை­யர்கள் என்ற கோரிக்­கையை முன்­வைத்தார். 

ஆனால் ஈழம் கொடியை வடக்கில் உயர்த்­திய வர­த­ராஜ பெருமாள் இன்று கோத்­தாபய ராஜ­பக் ஷ­வு­டன் இருக்­கின்றார். அதே­போன்று சஹ்­ரா­னுடன் ஒப்­பந்தம் செய்­து­கொண்ட ஹிஸ்­புல்­லாஹ்வும் கோத்­த­பாய ராஜ­பக் ஷவு­டனேயே இருக்­கின்றார். 

இது­தொ­டர்பில் அவர்கள் கதைப்­ப­தில்லை. ஹிஸ்­புல்லாஹ் தேர்­தலில் போட்­டி­யி­டு­வது சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு கிடைக்கும் முஸ்லிம் வாக்­கு­களை இல்­லா­ம­லாக்­கு­வ­தற்­காகும். 

மஹிந்த ராஜபக் ஷவே அவரை போட்டியிட வைத்தார். பாராளுமன்ற தேர்தலின்போது மஹிந்த ராஜபக் ஷ ஹிஸ்புல்லாஹ்வை தங்களுடன் இணைத்துக்கொள்வதாக தெரிவித்திருக்கின்றார். அத்துடன் சஹ்ரானை யார் போஷித்து வந்தார்கள் என்பது விசாரணைகளில் தெரியவந்திருக்கின்றது. அதனால் சஹ்ரானை அரசியலுக்காக பயன்படுத்தி இருக்கின்றார்கள் என்பது உண்மையாகும் என்றார்.