எனது மகிழ்ச்சியை பயங்கரவாதிகள் அழித்துவிட்டனர்!

திங்கள் மே 13, 2019

நாங்கள் ஒரு மகிழ்ச்சிகரமான குடும்பம்.ஆனால் இந்த மகிழ்ச்சியை பயங்கரவாதிகள் எம்மிடமிருந்து பறித்துவிட்டனர் என்கிறார் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளகைளை பறிகொடுத்த ரணில் சஞ்சய.

உயிர்த்த ஞாயிறு அன்று கொழும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் தனது மனைவி மற்றும் இரண்டு பெண்பிள்ளைகளை பறிகொடுத்த ரணில் சஞ்சய தனது துயரங்களை மேலும் தெரிவிக்கையில்

நாங்கள் ஒரு மகிழ்வான குடும்பம். நான் இத்தாலியில் இருக்கும்போது எனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை பேசுவேன்.ஆனால் தற்போது சில பயங்கரவாதிகள் எமது குடும்பத்தின் சந்தோஷத்தை குலைத்துவிட்டனர்.

நான் இத்தாலியில் இருக்கும்போது எனக்கு ஒரு தகவல் வந்தது. ஸ்ரீலங்காவில் தேவாலயமொன்றில் குண்டு வெடித்ததாக. ஆனால் நான் எனது மனைவி மற்றும் மகள்கள் அந்த தேவாலயத்துக்கு சென்றிருப்பார்கள் என நினைக்கவே இல்லை.தற்போது எனது சிறிய இரண்டு தேவதைகளும் எனது மனைவியும் என்னை இந்த பூமியில் தனியே விட்டு விட்டு சென்றுவிட்டனர் எனத் துயரத்துடன் தெரிவித்தார்.

பிரயதர்ஷினி பெர்னான்டோ புள்ளே(வயது 40) மகள்களான ரவீனா எல்சா பெர்னான்டோ (வயது 14),மற்றும் மரைன் சஞ்சனா பெர்னான்டோ வயது (11) ஆகியோரை இழந்து தவிக்கிறார் சஞ்சய.

எனது மகளின் பாடசாலைகளுக்காக கட்டுவப்பிட்டியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தேன்.ஆனால் அந்த வசதி தற்போது எனக்கு துயரமாக மாறிவிட்டது.எனது மனைவியும் மகள்களும் வழமையாக சிறிய தேவாலயமொன்றுக்கே சென்று வருவார்கள்.ஆனால் உயிர்த்தஞாயிறு தினமென்பதாலேயே அவர்கள் கட்டுவப்பிட்டிய தேவாலயத்துக்கு சென்றனர் என்கிறார் சஞ்சய.

y