எரிபொருள் சூத்திரத்திற்கமைய புதிய விலைப்பட்டியல் இன்று!

திங்கள் பெப்ரவரி 11, 2019

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக இன்று எரிபொருட்களின் விலை அடங்கிய புதிய விலைப்பட்டியில் அறிவிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் விலை சூத்திரத்திற்கான குழு பிற்பகல் கூடவுள்ளதாகவும் நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் விலைசூத்திரத்திற்கு அமைய ஒக்டேன் 92 மற்றும் 95 ரக பெற்றோல் ஒரு லீட்டர் 2 ரூபாவினாலும், ஒரு லீட்டர் டீசல் 2 ரூபாவினாலும், சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 3 ரூபாவினாலும் கடந்த மாதம் குறைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.