எரிபொருள் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு

ஞாயிறு மே 22, 2022

எரிபொருள் நெருக்கடியை விரைவில் தீர்க்க முடியும் என்று  சிறிலங்கா  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள்களுடனான கப்பல்கள் சில நாட்டை அண்மித்துள்ளதாகவும், அத்துடன் மேலும் எரிபொருளை பெறுவதற்கான கொள்வனவு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிடைக்கப்பெறும் அதிகளவான தொகை எரிபொருள் மின் உற்பத்தி நிலையங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்