எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளையிட்ட மூவர் கைது!

சனி செப்டம்பர் 14, 2019

நிட்டம்புவ ஹோரகொல்ல பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் இரவு வேளையில் நுழைந்து பணத்தை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நிட்டமபுவ காவல் துறையினர்   தெரிவித்துள்ளார்.

போலியகொட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் இன்றைய தினம் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஏப்பிரல் மாதம் 28 ஆம் திகதி குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணம் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்து குறித்த நபர்கள், 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபர்கள் மூவரும் நிட்டம்புவ – ஒர்ச்சத்வத்த பகுதியை சேர்ந்தவர்களுடன், கைது செய்யப்படும் போது அவர்களிடமிருந்து உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அந்த துப்பாக்கி இந்த கொள்ளை சம்பவத்திற்காக கொண்டுவரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.