எரிபொருட்களின் விலை குறைப்பு!

செவ்வாய் செப்டம்பர் 10, 2019

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்படுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92, ஒக்டேன் 95  ரக பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலையும் 2 ரூபாயால் குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒட்டோ டீசல் விலையில் எதுவித மாற்றங்களும் செய்யப்படவில்லை.

நல்லாட்சி அரசாங்கம் அறிமுகப்படுத்திய விலைச்சூத்திரத்துக்கு அமைய இந்த விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எரிபொருள்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் 2 ரூபாயாலும், ஒக்டேன் 95 ரக பெற்றோல்  2 ரூபாயாலும், சுப்பர் டீசல் 2 ரூபாயாலும்  விலை  குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றருக்கு – ரூ.136

ஒக்டேன் 95 ரக பெற்றோல்  லீற்றருக்கு – ரூ.161

 சுப்பர் டீசல்                        லீற்றருக்கு- ரூ.132  ஆகும்.