எரிவாயு விநியோகத்திற்கு தொலைபேசி செயலி

ஞாயிறு மே 22, 2022

எரிவாயு விநியோகம் மற்றும் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் எரிவாயு விநியோகத்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை தெளிவுபடுத்தும் வகையில் தொலைபேசி செயலியொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய நாளை மறுதினம் குறித்த தொலைபேசி செயலியை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த செயலியின் ஊடாக எந்த பகுதிக்கு எவ்வளவு எரிவாயு விநியோகிக்கப்படும் என்பதை அறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், litrogas.com/distribution-plan/ எனும் இணைய முகவரி ஊடாக நாளாந்த எரிவாயு விநியோகம் தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.