எதிர்க்கட்சியின் வேட்பாளர் யாராக இருந்தாலும் சவால் இல்லை!

ஞாயிறு ஏப்ரல் 14, 2019

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிற்கு எதிர்க்கட்சியில் இருந்து எந்த வேட்பாளரை நிறுத்தினாலும் அரசாங்கத்திற்கு அது சவாலாக இருக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

காலி, அக்மீமன பகுதியில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்து அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காக களமிறங்கும் பொது வேட்பாளர் நாட்டு மக்கள் அனைவருடன் ஒன்றாக இணைந்து செயற்படக்கூடிய ஒருவர் என அவர் தெரிவித்துள்ளார்.