‘எதிர்ப்பவர்களை போட்டுத் தள்ளுங்கள்!’ காகிதப்புலி சிங்கள ஒட்டுக்குழுவின் பிரான்ஸ் கூட்டத்தில் ஆலோசனை!

புதன் ஜூன் 26, 2019

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் என்ற பெயரில் இயங்கும் தம்மை எதிர்ப்பவர்களை கொலை செய்யுமாறு தமது ஆட்களுக்கு காகிதப்புலி சிங்கள ஒட்டுக்குழுவினர் ஆலோசனை வழங்கிய ஒலிப்பதிவு ஆதாரத்தை சங்கதி-24 இணையம் வெளியிடுகின்றது.

இறுதி யுத்தத்தில் சிங்களப் படைகளிடம் சரணடைந்து சக போராளிகளைக் காட்டிக் கொடுத்து, சிங்கள ஒட்டுக்குழுவாக மாறிய துரோகிகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் என்ற பெயரில் புலம்பெயர் தேசங்களில் இயங்கி வருகின்றனர்.

இவ் ஒட்டுக்குழுவிற்குள் ஏற்பட்ட உட்பூசல்கள் வெடித்து அது இரு கூறாக உடைவடைந்துள்ள நிலையில் இதுவரை காலமும் அதன் பொம்மைத் தலைவராக இயங்கி வந்த சுரேஸ் என்றழைக்கப்படும் அமுதன் என்பவர் தற்பொழுது அக் கும்பலை விட்டு வெளியில் வந்துள்ளார்.

பிரித்தானியாவில் வசித்து வரும் இவர், தலைமைச் செயலகம் என்ற பெயரில் இயங்கும் காகிதப்புலிகளுக்கும், சிங்களப் புலனாய்வாளர்களுக்கும் இடையில் உள்ள தொடர்பைத் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களிடம் அம்பலப்படுத்தியுள்ளார்.


இந்நிலையில் இக் கும்பலின் கூட்டங்களில் உரையாடப்பட்ட பல விடயங்களின் ஒலிப்பதிவுகள் இவரது வெளியேற்றத்தைத் தொடர்ந்து சங்கதி-24 இணையத் தளத்திற்குக் கிடைக்கப் பெற்றுள்ளன.

இதில் ஒரு ஒலிப்பதிவு 26.09.2011 அன்று பிரான்சில் நடைபெற்ற கூட்டம் ஒன்றின் பொழுது பதிவு செய்யப்பட்டிருந்தது.

இக் கூட்டத்தில் ஆலோசனை வழங்கும் தமிழரசன் என்பவர், தம்மை எதிர்ப்பவர்களைப் பற்றி ஊடகங்களில் எழுதி விமர்சிப்பதை விடுத்து அவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கின்றார்.

கே.பி, கருணா, டக்ளஸ் தேவானந்தா போன்ற துரோகிகளை ஈழமுரசு பத்திரிகை விமர்சித்து எழுதுவதைக் கண்டனம் செய்யும் இவர், முடிந்தால் இவர்களைக் கொலை செய்யுமாறும், விமர்சித்து எழுதுவதை விடக் கொலை செய்வதே சிறந்த வழி என்றும் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு தமிழரசன் என்ற காகிதப்புலி சிங்கள ஒட்டுக்குழுப் பிரமுகர் தெரிவித்து சரியாக ஒரு மாதம் கழித்து 31.10.2011 அன்று பாரிசில் தளபதி பரிதி மீது வாள்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 05.04.2011 அன்று இலண்டனில் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரான தனம் அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

தொடர்ந்து ஓராண்டு கழித்து 08.11.2012 அன்று பாரிசில் தளபதி பரிதி அவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

இதன் பின்னர் ஏறத்தாள இரண்டு ஆண்டுகள் கழித்து 18.09.2014 அன்று பாரிசின் புறநகர்ப் பகுதியில் வைத்து ஈழமுரசு பத்திரிகையின் மூத்த ஊடகவியலாளர் மீது துப்பாக்கிதாரி ஒருவரால் கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்த மூன்று செயற்பாட்டாளர்களும் தலைமைச் செயலகம் என்ற காகிதப்புலி சிங்கள ஒட்டுக்குழுவின் கீழ் இயங்க மறுத்ததோடு, இவர்களின் தவறுகளை புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே கோடிட்டுக் காட்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.