எட்டாம் வகுப்பில் கல்வி கற்ற ஒட்டுக்குழு தலைவரிடம் ஆலோசனை கேட்கும் கல்விமான்கள்
கிழக்கு பல்கலைக்கழகத்தின் விவசாயபீடத்தினை எவ்வாறு எமது மாவட்டத்தின் விவசாய அபிவிருத்திக்கு பயன்படுத்துவது என்கின்ற தொனிப்பொருளில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் (15.01.2021) அன்று இடம்பெற்றது.
இதில் அரசாங்க அதிபர்,பல்கலைக்கழக உபவேந்தர்,விவசாயத் திணைக்களத்தின்உதவி ஆணையாளர் மற்றும் விவசாய பீடத்தின் பீடாதிபதி உட்பட பல அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
இவர்களுக்கு எட்டாம் தரம் படித்த ஒட்டுக்குழுத் தலைவர் பிள்ளையான் பாடம் எடுத்துள்ளார்.
குறிப்பாக வேளாண்மை, நிலக்கடலை, மரமுந்திரிகை, தென்னை, சோளன் பயிற் செய்கை போன்றவை சம்பந்தமாகவும், பலதிட்டங்கள் முன்வைக்கப்பட்டது.
மேற்படித்துறையில் மாவட்டத்தில் எத்தனையோ புத்திஜீவிகள் இருக்கும் நிலையில், இத்துறைபற்றி கல்விமான்களுக்கு பிரதம வாத்தியாராக மாவட்டத்தில் எண்ணிலடங்காது கொலைகள், கொள்ளைகள், ஆட்கடத்தல்கள், கப்பம் பெறல் போன்ற செயல்களில் ஈடுபட்ட ஒரு தமிழ் இனத்திற்கு பச்சைத்துரோகி பாடம் கற்பிக்கின்றார். இதுதான் மாவட்டத்தின் நிலவரம்.
இந்தகல்விமான்கள் அனைவரும் தங்கள் ஆசனத்தை தக்கவைத்துக் கொள்வதற்காகவும், பதவி உயர்வு பெறுவதற்குமாக இவ்வாறான அடிமுட்டாள்களின் கால்களில் விழுந்துகிடக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகளினால் ஊழல் மற்றும் பித்தலாட்டம் நிறைந்து மாவட்டம் மேலும் மேலும் வறுமை நிலைக்கு செல்கின்றது.