எடுபிடி வேலைகளை,பறக்கும் ட்ரோன்களைவிட, இருகால் ரோபோக்கள் சிறப்பாக செய்யும்!

வியாழன் அக்டோபர் 24, 2019

சில 100 அடிகள் நடந்து சென்று செய்யும் வேலைகளுக்கு, இரண்டு கால்கள்-கைகள் கொண்ட, மனித வடிவ ரோபோக்கள் ஏற்றவை என்கின்றனர் அமெரிக்காவிலுள்ள, 'அஜிலிட்டி ரோபோடிக்'சின் ஆராய்ச்ச்சியாளர்கள்.

ஒரு கிடங்கியில் பொருட்களை வைப்பது, எடுப்பது, துாதஞ்சல் வண்டியிலிருந்து இறங்கி, பொருட்களை, முகவரிதாரரின் வீட்டு வாசலுக்கு கொண்டுபோய் தருவது போன்ற எடுபிடி வேலைகளை, பறக்கும் ட்ரோன்களைவிட, இருகால் ரோபோக்கள் சிறப்பாக பணியகளைச் செய்ய முடியும்.

எனவே, அஜிலிட்டி, தனது, 'டிஜிட் வி2' என்ற ரோபோவை தற்போது வெள்ளோட்டம் பாரத்து வருகிறது.ஒரு மேசை மேல் உள்ள பெட்டியை எடுத்து, பத்திரமாக இன்னொரு அறையிலுள்ள மேசை மேல் கொண்டுபோய் வைக்கும் வேலையை டிஜிட் ரோபோ மெதுவாக, ஆனால் கச்சிதமாக செய்து முடிக்கும் யூடி.யூப் வீடியோ ஒன்று தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

இந்த ரோபோவில் உள்ள அதிக சத்தம், தடுமாறும் பாதங்கள் போன்ற குறைகளை நீக்கி, டிஜிட் வி3 என்ற ரோபோவை 2020ல் சந்தையில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதில் அஜிலிட்டி குறியாக இருக்கிறது.