ஹெல்மெட் அணியவில்லை என்றால் பெட்ரோல் கிடையாது!

வெள்ளி ஓகஸ்ட் 09, 2019

வடசென்னையில் உள்ள 60க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க்களில் ஹெல்மெட் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு இனி பெட்ரோல் வழங்கப்படாது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஹெல்மெட் அணியாததால் விபத்தின் போது தலையில் காயம் அடைந்து பலர் உயிரிழக்கிறார்கள். இதனை தவிர்க்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்படுகிறது.

ஆனால் ஹெல்மெட் அணியாமல் பலர் வாகனங்களை ஓட்டிதான் செல்கிறார்கள். மறுபுறம் சிறார்கள் வேகமாக வாகனங்களை ஓட்டி விபத்துக்களை ஏற்படுத்துகிறார்கள்.இந்நிலையில் வடசென்னையில் ஹெல்மெட் அணியவில்லை என்றால் வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் வழங்கப்படாது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  

போக்குவரத்து போலீசார் மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் இடையிலான பேச்சுவார்த்தையில் இதுதொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே விபத்தை குறைக்கும் விதமாக ஹெல்மெட் அணியவில்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்செந்தூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் கடந்த மே மாதம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.