ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் இரத்து-மு.க.ஸ்டாலின்

வியாழன் செப்டம்பர் 19, 2019

தி.மு.க.நடாத்துவதற்கு திட்டமிட்டிருந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்விடயத்தை தெரிவித்தார். மு.க.ஸ்டாலின் மேலும் கூறியுள்ளதாவது, “மத்திய அரசு ஹிந்தியை திணிக்காதென ஆளுநர் பன்வாரிலால் உறுதியளித்துள்ளார்.

ஆகையாலேயே  ஹிந்தி திணிப்பை எதிர்த்து எதிர்வரும் 20ஆம் திகதி நடத்தவிருந்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம்.மேலும் ஹிந்தியை திணிக்க வேண்டுமென  தான் கூறவில்லை என உட்துறை அமைச்சர் அமித்ஷா இன்று டுவிட் செய்துள்ளார்.அதனடிப்படையிலேயே இந்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டோம்” என குறிப்பிட்டுள்ளார்.