ஹக்கீமின் அரசியல் தலையீட்டுக்குக் கண்டனம்!

வியாழன் செப்டம்பர் 12, 2019

யாழ் பல்கலைக்கழத்திற்கு கல்விசாரா ஊழியர்களை ஆட்சேர்த்துக் கொள்ளும் நடைமுறையைபக்கச் சார்பற்றதாகவும்,   அரசியல்  தலையீடுஅற்றவகையிலும் மேற்கொள்ளவேண்டுமெனவலியுறுத்தியாழ் பல்கலைக்கழகஊழியர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்த்திற்குதமிழ்த் தேசியமக்கள் முன்னணிபூரணஆதரவுதெரிவித்துக் கொள்கின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊழியர்களைஆட்சேர்ப்புச் செய்வதில் பக்கச் ;சார்புகளும் முறைகேடுகளும் நிலவுவதாகவும்,அரசியல் தலையீடுகாணப்படுவதாகவும் ஊழியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

உயர்கல்வியமைச்சிலிருந்துயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குஅனுப்பப்பட்டுள்ளஆட்சேர்ப்புப் பட்டியலில் வடக்குமாகாணத்திலிருந்துவிண்ணப்பித்திருந்த 400 இற்கும் அதிகமான கல்வி சாரா ஊழியர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

குறிப்பாகயாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சிவளாகத்தில் ஒப்பந்தநிறுவனமொன்றின் கீழ் பணியாற்றுகின்ற 53 பேர்களின் பெயர்கள்,யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றுகின்ற 30 இற்கும் மேற்பட்டஊழியர்களின் பெயர்கள், வவுனியா வளாகத்தில்  பணியாற்றுகின்றஊழியர்களின் பெயர்கள் தவிர்க்கப்பட்டு வடக்கு மாகாணத்திற்கு வெளியேயிருந்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனதுஆதரவாளர்களின் பெயர்களை இணைத்து ஆட்சேர்ப்புப் பட்டியலைஅனுப்பியுள்ளதாகவும் ஊழியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அமைச்சரின் இச் செயற்பாட்டினை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். 

இ;ந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிலவுகின்ற ஆட்சேர்ப்பு நடை முறையிலுள்ள பிரச்சினைகள்மற்றும் நிர்வாகமுறைகேடுகள் போன்றபிரச்சினைகளுக்குத் தீர்வுபெற்றுத் தருமாறு கோரியாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வி சாராஊழியர்கள் கடந்த வெள்ளிக்கிழமை(06-09-2019)  பல்கலைக்கழகநுழைவாயிலை இடைமறித்துக் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

எனினும் அவர்களதுகோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன் ரவூப்ஹக்கீம் மீண்டும்  அமைச்சராகப் பொறுப்பேற்றபின்னர் தான் முன்னதாகஅனுப்பியிருந்தஆட்சேர்ப்புப் பட்டியலிலுள்ளவர்களுக்கு நியமனங்கள் வழங்குவதைவிரைவுபடுத்துமாறுயாழ்ப்பாணப் பல்கலைக்கழகநிர்வாகத்திற்குஅவர் அழுத்தம் கொடுத்துள்ளதாகஊழியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தமிழர்களின் தொழில் வாய்ப்பைதிட்டமிட்டுபறிக்கும் நோக்கிலும், இனங்களுக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தும் வகையிலும்,பல்கலைக்கழகநிர்வாகசெயற்பாடுகளைசீர் குலைக்கும் வகையிலும் அரசியல் தலையீடுகளை மேற்கொள்ளும் அமைச்சர் ரவூப்ஹக்கீம் அவர்களின் செயற்பாட்டினைமிகவும் வன்மையாகக் கண்டிப்பதுடன் அவர் தனது அரசியல் தலையீடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டுமேனவும் வலியுறுத்துகின்றோம்.

மேலும் பல்கலைக்கழகநிர்வாகம் அத்தகையசெயற்பாடுகள் தொடர இடமளிக்கக்கூடாதெனவும் கோருகின்றோம்.

செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசியமக்கள் முன்னணி