ஹரின் பெர்னான்டோவின் கருத்து உண்மைக்குப் புறம்பானது

ஞாயிறு செப்டம்பர் 20, 2020

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ வெளியிட்ட கருத்தினை வணக்கத்திற்குரிய கார்தினல் மெல்கம் ரஞ்சித் நிராகரித்துள்ளார்.

குறித்த கருத்து தொடர்பில் கொழும்பு மறைமாவட்டத்தின் துணை ஆயர்களின் அமைப்பும் கண்டனம் வெளியிட்டுள்ளதாக பேராயர் இல்லம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

ஹரீன் பெர்னாண்டோவால் பேராயர் மீது உண்மைக்கு புறம்பான, அநீதியான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேராயர், ஆயர்கள் அல்லது எந்தவொரு காத்தோலிக்க பாதிரியார்களோ ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னரே அறிந்திருக்கவில்லை என பேராயர் இல்லம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.