இலஞ்சம், ஊழலை ஒழிக்க ஐந்தாண்டு தேசிய திட்டம்!

வெள்ளி மார்ச் 15, 2019

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவற்றை இல்லாதொழிக்கும் வகையில், ஐந்தாண்டு தேசிய வேலைத்திட்மொன்று, எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சிறிலங்கா  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் பங்குபற்றலுடன், இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நிகழ்வு, கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக, ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார்.