இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவரின் மண்டை உடைப்பு

ஞாயிறு நவம்பர் 22, 2015

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று (நவம்பர் 21) 400-க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற பொழுது இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர் வர்க்கீஸின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.இதனால் அவரின் மண்டை உடைந்துள்ளது.  

இன்று(நவம்பர் 22) அதிகாலை கச்சத்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த பொழுது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் கடலில் வீசியிருந்த வலைகளை சேதப்படுத்தி இருக்கின்றனர். அதோடு மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் அபகரித்துள்ளனர்.

இதனோடு இலங்கை கடற்படையினர், அலெக்ஸ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகை முற்றுகையிட்டு அதில் இருந்த மீனவர்கள் மார்டோ, முருகேசன், மாடசாமி, வர்க்கீஸ் ஆகியோரை இரும்பு தடிகளாலும் கற்களை வீசியும் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் மீனவர் வர்க்கீஸின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டி இருக்கிறது. அதன்பின் இலங்கை கடற்படையினர், அங்கிருந்து சென்ற நிலையில் மற்ற மீனவர்கள் காயம்பட்ட மீனவர் வர்க்கீஸுடன் இன்று காலை கரை திரும்பினர். காயம்பட்ட வர்க்கீஸ் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு தலையில் 5 தையல்கள் போடப்பட்டது. காயம்பட்ட மற்ற மீனவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.